/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
ஏரியில் மூழ்கி 4 சிறுவர்கள் பரிதாப பலி
/
ஏரியில் மூழ்கி 4 சிறுவர்கள் பரிதாப பலி
ADDED : மே 25, 2025 01:48 AM
கெங்கவல்லி:இரு வேறு இடங்களில் ஏரியில் மூழ்கி நான்கு சிறுவர்கள் உயிரிழந்தனர்.
சேலம் மாவட்டம், கெங்கவல்லியை சேர்ந்த ஷாஜகான் மகன் சமீர், 15; ஒன்பதாம் வகுப்பு மாணவர். இவரது உறவினரான கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலத்தை சேர்ந்த சர்புதீன் மகன் ரியாஷ், 13; எட்டாம் வகுப்பு மாணவர்.
பள்ளி விடுமுறையால் சமீர் வீட்டுக்கு வந்துள்ளார். ரியாஷ், சமீர் உட்பட அப்பகுதி சிறுவர்கள், கெங்கவல்லி அருகே வலசக்கல்பட்டி ஏரியில் நேற்று குளித்தனர். அப்போது சமீர், ரியாஷ் நீரில் மூழ்கி இறந்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ரெட்டிப்பட்டியை சேர்ந்த மாதேஷ் வீட்டுக்கு, அவரது உறவினரான வாலாஜாபேட்டையை சேர்ந்த கமல்ராஜ் - பாரதி குடும்பத்தினர், கோடை விடுமுறைக்கு மகள் கிருஷிகா, 9, மகன் மேகனேஸ்வரன், 7, ஆகியோருடன் வந்திருந்தனர்.
அவர்களின் உறவினரான ரெட்டிப்பட்டியை சேர்ந்த மாதேஷ் - பாப்பாத்தி, இரண்டாம் வகுப்பு படிக்கும் மகள் பத்மஸ்ரீ, 7, ஆகியோரும் வந்திருந்தனர்.
சிறார்கள் மூவரும், ரெட்டிப்பட்டி ஏரியில் நேற்று மாலை குளித்தனர். அப்போது பத்மஸ்ரீ, மேகனேஸ்வரன் நீரில் மூழ்கி இறந்தனர்.

