/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
பார்வைக்கு வைக்கப்பட்ட 400 ஆண்டு பழமையான தேர்
/
பார்வைக்கு வைக்கப்பட்ட 400 ஆண்டு பழமையான தேர்
ADDED : டிச 30, 2025 04:59 AM
திருச்செங்கோடு: திருச்செங்கோட்டில், புகழ்பெற்ற அர்த்தநாரீஸ்-வரர் மலைக்கோவில் அமைந்துள்ளது. இக்கோ-விலில், வைகாசி விசாக தேர் திருவிழா ஆண்டு
தோறும் விமரிசையாக நடந்து வருகிறது. 400 ஆண்டு பழமையான தேரில் மர அச்சு, மர சக்க-ரங்களுக்கு பதிலாக இரும்பு அச்சு, இரும்பு சக்க-ரங்கள் பொருத்தப்பட்டு, பயன்படுத்தப்பட்டு வந்-தது. இந்நிலையில், தேர் மிகவும் பழமையடைந்து விட்டதால், புதிய தேர் மாற்றியமைக்க, தமிழக அரசு, 2.17 கோடி ரூபாய் ஒதுக்கியது.
இதையடுத்து, புதிய தேர் வடிவமைக்கப்பட்டு, கட்டுமான பணி நிறைவடைய உள்ளது. வரும், 2026 ஜன., 25ல் புதிய தேர் வெள்ளோட்ட நிகழ்ச்சி நடக்க உள்ளது. 2026ம் ஆண்டு வைகாசி விசாக தேர் திருவிழாவில், புதிய தேரில் அர்த்தநாரீஸ்வரர் நகர்வலம் வரும் நிகழ்ச்சி நடை-பெறும். பழமை வாய்ந்த தேரை, எதிர்கால சந்த-தியினர் கண்டு வணங்கி மகிழும் வகையில், பொக்லைன் உதவியுடன், தேர்நிலை அருகில் இடம் ஒதுக்கப்பட்டு நிலை நிறுத்தப்பட்டது. இதை
பக்தர்கள் பார்த்து வணங்கி செல்கின்றனர்.

