/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
சாயக்கழிவால் பாதிப்பு 5 துறை அதிகாரிகள் ஆய்வு
/
சாயக்கழிவால் பாதிப்பு 5 துறை அதிகாரிகள் ஆய்வு
ADDED : நவ 26, 2024 01:48 AM
பள்ளிப்பாளையம், நவ. 26-
பள்ளிப்பாளையத்தில் சாயக்கழிவுநீரால் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டு, 100க்கும் மேற்பட்ட வீடுகளில், கடந்த, இரண்டு வாரங்களுக்கு மேலாக சிவப்பு, ரோஸ், ஆரஞ்சு நிறத்தில் தண்ணீர் வந்தது. மேலும், இ.ஆர்., தியேட்டர் பகுதியில் உள்ள ஒரு வீட்டின் கிணற்றில் சாயக்கழிவுநீர் ஊற்றெடுத்தது. சாயக்கழிவால் பாதிக்கப்பட்ட பகுதியில், குமாரபாளையம் மாசு கட்டுப்பாட்டுவாரிய அதிகாரிகள், 4 முறைக்கு மேல் ஆய்வு செய்தனர். ஆனால், சம்பந்தப்பட்ட சாய ஆலைகள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. இந்நிலையில், நேற்று மாலை திருச்செங்கோடு ஆர்.டி.ஓ., சுகந்தி தலைமையில், ஐந்து துறையை சேர்ந்த அதிகாரிகள், சாயக்கழிவால் பாதிக்கப்பட்ட பகுதியை ஆய்வு செய்தனர்.
இதுகுறித்து, பள்ளிப்பாளையம் வருவாய்த்துறை அதிகாரிகள் கூறுகையில், ''திருச்செங்கோடு ஆர்.டி.ஓ., தலைமையில் வருவாய்த்துறை, மாசு கட்டுப்பாட்டுவாரியம், நீர்வளத்துறை, மின்துறை, குடிநீர் வடிகால் வாரியம் உள்ளிட்ட துறைகளை சேர்ந்த அதிகாரிகள், சாயக்கழிவால் பாதிக்கப்பட்ட பகுதியை ஆய்வு செய்தனர். பின், ஒவ்வொரு துறை அதிகாரிகள் அறிக்கை தருவர். இதை மாவட்ட கலெக்டருக்கு அனுப்பப்படும். இதையடுத்து நடவடிக்கை இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.