/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
நாமக்கல் உழவர் சந்தையில் 57 டன் காய்கறி விற்பனை
/
நாமக்கல் உழவர் சந்தையில் 57 டன் காய்கறி விற்பனை
ADDED : நவ 17, 2025 03:47 AM
நாமக்கல்: நாமக்கல் கோட்டை சாலையில், உழவர் சந்தை செயல்பட்டு வரு-கிறது. இங்கு, தினமும் காலை, 5:00 முதல், 10:00 மணி வரை, நாமக்கல் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள விவசாயிகள், தங்கள் தோட்டங்களில் விளைந்த காய்கறி, பழங்களை விற்பனை செய்-கின்றனர். பொதுமக்கள் உழவர் சந்தைக்கு வந்து காய்கறிகளை வாங்கி செல்கின்றனர்.
வார விடுமுறை நாட்களான சனி, ஞாயிற்றுக்கிழமைகளில், அதிக-ளவில் வாடிக்கையாளர்கள் உழவர் சந்தைக்கு வந்து, தங்களுக்கு தேவையான காய்கறி, பழங்களை வாங்கி செல்வது வழக்கம்.
ஞாயிற்றுக்கிழமையான நேற்று, மொத்தம், 213 விவசாயிகள் உழவர் சந்தைக்கு காய்கறிகளை விற்பனைக்கு கொண்டு வந்தி-ருந்தனர். 47,165 கிலோ காய்கறிகள், 10,155 கிலோ பழங்கள், 35 கிலோ பூக்கள், என மொத்தம், 57,355 கிலோ எடையுள்ள விளைபொருட்கள், விற்பனை செய்யப்பட்டன. அவற்றை, 11,471 நுகர்வோர் வாங்கி சென்றனர். அதன் மூலம், 24 லட்சத்து, 68,035 ரூபாய்க்கு விற்பனையானது. தக்காளி கிலோ, 40 ரூபாய், கத்தரி, 48, வெண்டை, 30, சின்ன வெங்காயம், 42, பெரிய வெங்காயம், 30 ரூபாய்க்கு விற்பனை-யாகின.
தக்காளி விலை உயர்வு
ராசிபுரம் உழவர் சந்தையில், தக்காளி கிலோ, 42 ரூபாய், கத்தி-ரிக்காய், 55, வெண்டை, 32, புடலை, 55, பீர்க்கன், 62, பாகல், 60, சுரைக்காய், 16, பச்சை மிளகாய், 45, முருங்கை, 95, சின்ன வெங்காயம், 52, பெரிய வெங்காயம், 35, முட்டைகோஸ், 32, கேரட், 70, பீன்ஸ், 60, பீட்ரூட், 50 ரூபாய்க்கு விற்பனை செய்-யப்பட்டது. இதேபோல் வாழைப்பழம்
கிலோ, 40 ரூபாய், கொய்யா, 60, பப்பாளி, 30, தர்பூசணி, 15, எலுமிச்சை, 60 ரூபாய்க்கு விற்பனையானது.
நேற்று ஒரே நாளில், 18.30 லட்சம் ரூபாய்க்கு காய்கறிகள் விற்ப-னையாகின.
கடந்த வாரம், தக்காளி கிலோ, 22 ரூபாய்க்கு விற்ற நிலையில், நேற்று 42 ரூபாய்க்கு விற்பனையானது.

