/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
'டெட்' 2ம் தாள் தேர்வு 8,504 தேர்வர்கள் பங்கேற்பு
/
'டெட்' 2ம் தாள் தேர்வு 8,504 தேர்வர்கள் பங்கேற்பு
ADDED : நவ 17, 2025 03:49 AM
நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில், 32 மையங்களில் நடந்த ஆசிரியர் தகுதி, இரண்டாம் தாள் தேர்வில்(டெட்), 8,504 பேர் பங்கேற்-றனர். 1,152 பேர் பங்கேற்கவில்லை.
ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில், தமிழக பள்ளிகளில், இடை-நிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களாக பணியாற்ற தகுதி பெறு-வதற்காக நடத்தப்படும் ஆசிரியர் தகுதி தேர்வு(டெட்), தமிழகம் முழுவதும் நேற்று நடந்தது. தமிழகத்தில், ஒட்டு மொத்தமாக, 4.80 லட்சத்திற்கும் மேற்பட்டோர்
எழுதுகின்றனர்.
நாமக்கல் மாவட்டத்தில், நாமக்கல், ப.வேலுார், திருச்செங்கோடு, ராசிபுரம், மோகனுார் உள்ளிட்ட தாலுகாவில், 32 மையங்களில் இத்தேர்வு நடந்தது. இதற்காக மாவட்டம் முழு-வதும் இருந்து, 9,656 ஆசிரியர்கள் விண்ணப்பித்திருந்தனர். நேற்று நடந்த தாள்-2 தேர்விற்கு, காலை, 8:30 மணி முதல் தேர்-வர்கள் வருகை தர துவங்கினர். 9:30 மணிக்கு மேல் யாரையும் அனுமதிக்கவில்லை. நேற்று நடந்த தேர்வில், 8,504 பேர் பங்-கேற்றனர். 1,152 தேர்வர்கள் கலந்து கொள்ளவில்லை.

