/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
கூட்டுறவு வார விழாவையொட்டி என்.சி.எம்.எஸ்.சி.,ல் கோலப்போட்டி
/
கூட்டுறவு வார விழாவையொட்டி என்.சி.எம்.எஸ்.சி.,ல் கோலப்போட்டி
கூட்டுறவு வார விழாவையொட்டி என்.சி.எம்.எஸ்.சி.,ல் கோலப்போட்டி
கூட்டுறவு வார விழாவையொட்டி என்.சி.எம்.எஸ்.சி.,ல் கோலப்போட்டி
ADDED : நவ 17, 2025 03:50 AM
நாமக்கல்: நாடு முழுவதும், 72வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா, கடந்த, 14ல் தொடங்கி, வரும், 20 வரை நடக்கிறது. கூட்டுறவு வார விழாவையொட்டி, அனைத்து வட்டாரங்களிலும், தினமும், மரக்கன்று நடுதல், உறுப்பினர் சந்திப்பு முகாம், பள்ளி குழந்தைக-ளுக்கான வினாடி - வினா போட்டி, பேச்சு, கட்டுரை போட்டிகள் நடத்தப்படுகின்றன. மேலும், கதை சொல்லுதல், ரத்ததான முகாம், மருத்துவ முகாம், கூட்டுறவின் தயாரிப்பு பொருட்கள் கண்காட்சி, கதர் கிராமிய பொருட்கள் கண்காட்சி, மகளிர் சுய உதவி குழு தயாரிப்புகள், ஆவின் பொருட்கள் தயாரிப்பு கண்-காட்சி நடத்தப்படுகிறது.
மேலும், ஆண்களுக்கான ஸ்லோ பைக், ஸ்லோ சைக்கிள் போட்டி, பெண்களுக்கான கோலப்போட்டி, அடுப்பில்லா சமையல் போட்டியும் நடத்தப்படுகிறது. அதன்படி, நாமக்கல் வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்-கத்தில்(என்.சி.எம்.எஸ்.,), நேற்று மகளிருக்கான கோலப்போட்டி நடந்தது.நாமக்கல் மண்டல, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அருளரசு தலைமை வகித்து போட்டியை துவக்கி வைத்தார். அதில், ஏராளமான பெண்கள் வண்ணக்கோலங்களை இட்டு தங்-களது திறமையை வெளிப்படுத்தினர். தேர்வு செய்யப்படும், முதல் மூன்று பேருக்கு, 1,000, 600, 400 ரூபாய் பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்படும். நாமக்கல் கூட்டுறவு ஒன்றிய மேலாண் இயக்குனர் சரவணன், கூட்டுறவு துறை அலுவலர்கள், பணியா-ளர்கள் உள்பட பலர்
பங்கேற்றனர்.

