/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
எஸ்.ஐ.ஆர்.,யை கண்டித்து த.வெ.க., ஆர்ப்பாட்டம்
/
எஸ்.ஐ.ஆர்.,யை கண்டித்து த.வெ.க., ஆர்ப்பாட்டம்
ADDED : நவ 17, 2025 03:50 AM
நாமக்கல்: நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணி (எஸ்.ஐ.ஆர்.) நடந்து வருகிறது. தமிழகத்திலும் இப்பணி தொடங்கி நடந்து வருகிறது. வீடு, வீடாக ஊழியர்கள் விண்ணப்-பங்களை வழங்கி வருகின்றனர். ஆனால், இந்த சிறப்பு திருத்த பணியில் குழப்பம் இருப்பதாக, ஆங்காங்கே குற்றச்சாட்டு எழுந்து வருகிறது.
தி.மு.க., கூட்டணி கட்சிகள் மற்றும் நடிகர் விஜய் தலைமையி-லான த.வெ.க., இந்த தீவிர சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இதற்கு எதிராக ஆர்ப்பாட்டங்களையும் அறிவித்து போராடி வருகின்றன. அதன்-படி, வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து, த.வெ.க., சார்பில், தமிழகம் முழுவதும், தமிழக மக்-களின் ஓட்டுரிமையை பறிக்கும் வாக்காளர் பட்டியல் தீவிர சிறப்பு திருத்தம்(எஸ்.ஐ.ஆர்.,) குளறுபடிகளை எதிர்த்து, கண்-டன ஆர்ப்பாட்டம் நடந்தது.நாமக்கல்லில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு, மாநில துணை பொதுச்-செயலாளர் விஜயலட்சுமி தலைமை வகித்தார். கிழக்கு, மேற்கு மாவட்ட செயலாளர்கள் சதீஷ்குமார், செந்தில்நாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து, தேர்தல் ஆணையத்திற்கு எதிராக கோஷம் எழுப்பினர். முன்னதாக, கரூரில் த.வெ.க., பிர-சார கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த, 41 பேருக்கு, இரண்டு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர்.

