/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
போதையில் தகராறு வாலிபருக்கு 'காப்பு'
/
போதையில் தகராறு வாலிபருக்கு 'காப்பு'
ADDED : நவ 17, 2025 03:51 AM
ராசிபுரம்: ராசிபுரம், தொட்டிப்பட்டி, சந்திரசேகரபுரம் காந்திநகர் பகுதியை சேர்ந்தவர் குமார் மகன் விஜய், 24; இவர், நேற்று மதியம் தன் நண்பருடன் குடித்து விட்டு பஸ் ஸ்டாண்டில் தகராறு செய்து கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக போதையில் வந்த கவுண்டம்பாளையம், இந்திரா காலனியை சேர்ந்த கந்தசாமி மகன் மணிகண்டன், 26, இரண்டு பேர் சண்டை போடுவதை பார்த்து தடுத்துள்ளார். இதில், மூன்று பேருக்கும் தகராறு ஏற்பட்-டது.
மூன்று பேரும் மாறி, மாறி தாக்கிக்கொண்டனர். கோபமடைந்த மணிகண்டன், அருகில் இருந்த பாட்டிலை எடுத்த விஜய் தலை மற்றும் உடலின் பக்கவாட்டில் அடித்துள்ளார்.
இதுகுறித்து புகார்படி, ராசிபுரம் போலீசார், மணிகண்டனை கைது செய்தனர்

