/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
காளியம்மனுக்கு கிடா வெட்டி நேர்த்திக்கடன்
/
காளியம்மனுக்கு கிடா வெட்டி நேர்த்திக்கடன்
ADDED : பிப் 07, 2025 04:02 AM
ராசிபுரம்: ராசிபுரம் அருகே, 70 ஆண்டுகளுக்கு மேலான பத்ரகாளியம்ம-னுக்கு எருமைகிடா வெட்டி நேர்த்திக்கடன் செலுத்தும் விழா நடந்தது.
ராசிபுரம் அடுத்த மேட்டுக்காடு பகுதியில், பிரசித்தி பெற்ற பத்ர-காளியம்மன் கோவில் உள்ளது. இந்தாண்டு தை மாத திருவிழா, கடந்த வாரம் தொடங்கியது. நேற்று முன்தினம் மாலை பெண்கள் மற்றும் ஆண்கள் கன்னம், நாக்கு, முதுகு உள்ளிட்ட பகுதிகளில் அலகு குத்தி கரகம் எடுத்து ஊர்வலமாக சென்றனர். பின் தீ மிதிக்கும் விழா நடந்தது.தொடர்ந்து நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக கொண்டு வரப்-பட்ட, 20-க்கும் மேற்பட்ட எருமைகளை வரிசையாக நிறுத்தியி-ருந்தனர். பலியிட்ட எருமை கிடாவை, 6 அடி குழியில் வெட்டி நேர்த்திக்கடன் செலுத்தினர். இந்த வினோத திருவிழா, 70 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வருவது குறிப்பிடத்தக்கது. சேலம், ஈரோடு, நாமக்கல், ஆத்துார் உள்ளிட்ட பகுதிகளிலி-ருந்து, ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

