/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
பொங்களாயி கோவிலில் விடிய விடிய விருந்து
/
பொங்களாயி கோவிலில் விடிய விடிய விருந்து
ADDED : ஆக 05, 2025 01:39 AM
ராசிபுரம், ராசிபுரம் அடுத்த மலையாம்பட்டி கிராமத்தில், ஆலமரத்துக்கு அடியில் மலையாள தெய்வம் பொங்களாயி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் ஆண்கள் மட்டுமே கலந்துகொள்ளும் பொங்கல் விழா நடப்பது வழக்கம்.
இக்கோவிலில் பக்தர்கள் தங்கள் நேர்த்திக்கடனுக்காக ஆடுகளை பலியிடுவது வழக்கம். நேற்று முன்தினம் மாலை, அம்மனுக்கு பூ அலங்காரம், தோரணைகள் கட்டப்பட்டடன. மாலை முதல் வேண்டுதலுக்கு கிடா வழங்குபவர்கள் தங்களது கிடாக்களை கோவிலில் கட்ட தொடங்கினர். நடு இரவு வரை கிடா வழங்கி வந்தனர்.
மொத்தம், 232 கிடா ஒரே இரவில் பலியிடப்பட்டது. அதன் பின், இரவு முழுவதும் சமையல் வேலை நடந்தது. 3,000 கிலோ ஆட்டுக்கறியை சமைத்தனர். மேலும், 500 கிலோ அரிசி யில் பொங்கல் வைத்தனர். விடியற்காலை அன்னதானம் தொடங்கியது. ஆண்கள் நீண்ட வரிசையில் நின்று வாங்கி சாப்பிட்டனர்.
நேற்று விடியற்காலை தொடங்கிய விருந்து காலை, 10:00 மணி வரை நடந்தது. மதியத்திற்கு மேல் பக்தர்கள் யாருமின்றி கோவில் வெறிச்சோடியது.