/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
ராசிபுரத்தில் வரும் 24ம் தேதி நடமாடும் மண் பரிசோதனை முகாம்
/
ராசிபுரத்தில் வரும் 24ம் தேதி நடமாடும் மண் பரிசோதனை முகாம்
ராசிபுரத்தில் வரும் 24ம் தேதி நடமாடும் மண் பரிசோதனை முகாம்
ராசிபுரத்தில் வரும் 24ம் தேதி நடமாடும் மண் பரிசோதனை முகாம்
ADDED : ஜூலை 05, 2024 12:20 AM
நாமக்கல்: வேளாண்மை துறை சார்பில், நடமாடும் மண் பரிசோதனை முகாம் ராசிபுரத்தில் வரும், 24ம் தேதி நடக்கிறது.திருச்செங்கோட்டில், வேளாண் துறையின் கீழ் இயங்கி வரும் நடமாடும் மண் பரிசோதனை நிலையம் உள்ளது.
வாகனம் மூலம் கிராமங்களுக்கு நேரடியாக சென்று, விவசாயிகளிடமிருந்து மண் மற்றும் நீர் மாதிரிகளை பெற்று ஆய்வு செய்து, மண் வள அட்டை அன்றைய தினமே விவசாயிகளுக்கு வழங்கப்படும். 2024--25ம் ஆண்டில் இதுவரை ஒன்பது முகாம் மூலம், 312 மண்-மாதிரி, 96 நீர் மாதிரிகள் ஆய்வு செய்து மண்வள அட்டை வழங்கப்பட்டுள்ளன.ஜூலை மாதத்திற்கான முகாம் வரும், 24 காலை, 9:00 மணிக்கு தொடங்குகிறது. எருமப்பட்டி ஒன்றியம் புதுக்கோட்டையிலும், 16ம் தேதி பள்ளிபாளையம் ஒன்றியம் களியனுாரிலும், 24 ம் தேதி ராசிபுரம் ஒன்றியம் வடுகத்திலும், 31ம் தேதி புதுச்சத்திரம் ஒன்றியம் கண்ணப்பூர் பட்டியிலும் முகாம் நடக்கிறது.விவசாயிகள் மண்மாதிரி, நீர் மாதிரிகளை நேரடியாக மண் பரி-சோதனை நிலையம், வசந்தபுரம் மற்றும் நடமாடும் மண்பரிசோ-தனை நிலையம் நாராயணம்பாளையத்திலும் வழங்கி ஆய்வு செய்து மண்வள அட்டை பெறலாம். இத்தகவலை மாவட்ட கலெக்டர் உமா தெரிவித்துள்ளார்.