/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
பிரிவு சாலையில் அறிவிப்பு பலகை தேவை
/
பிரிவு சாலையில் அறிவிப்பு பலகை தேவை
ADDED : அக் 24, 2024 01:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பிரிவு சாலையில்
அறிவிப்பு பலகை தேவை
எலச்சிபாளையம், அக். 24-
எலச்சிபாளையம் ஒன்றியம், கிளாப்பாளையம் ஊராட்சி மன்ற அலுவலகம் மேற்கு பகுதியில் உஞ்சனை சாலையில் உள்ள பிரிவு சாலை முகாசி, ராயர்பாளையம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்கிறது. இதுவரை இப்பகுதியில் அறிவிப்பு பலகை வைக்கப்படவில்லை. இதனால், இந்த வழியாக செல்லும் மக்கள் செல்ல வேண்டிய சாலை எதுவென்று தெரியாமல், மாற்று பாதையில் பல கிலோ மீட்டர் தொலைவு சுற்றிக்கொண்டு சென்று கடும் சிரமத்துக்கு ஆளாகின்றனர். எனவே, பிரிவு சாலையில் அறிவிப்பு பலகை வைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.