/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும்
/
ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும்
ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும்
ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும்
ADDED : மே 23, 2025 01:52 AM
எலச்சிபாளையம், மேபெரியமணலி, அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு, சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும்.
எலச்சிபாளையம் யூனியன், பெரியமணலி அரசு ஆரம்ப சுகாதார நிலையம், 20 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது. ஜேடர்பாளையம், தொண்டிப்பட்டி, குமரவேலிபாளையம், நெய்க்காரம்பாளையம், கோக்கலை, எளையாம்பாளையம் என தினமும், 500க்கும் மேற்பட்ட நோயாளிகள், கர்ப்பிணிகள் வந்து செல்கின்றனர்.
ஆரம்ப சுகாதார நிலையத்தை சுற்றி, சுற்றுச்சுவர் அமைக்கப்படவில்லை. இதனால், மர்ம நபர்கள் எளிதில் நுழைந்து பொருட்களை திருடி செல்ல வாய்ப்பு உள்ளது. எனவே, மருத்துவமனையை சுற்றி சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும் என, இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்