/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
வெப்படை அருகே வீட்டுக்குள் புகுந்த பாம்பு
/
வெப்படை அருகே வீட்டுக்குள் புகுந்த பாம்பு
ADDED : அக் 11, 2024 01:11 AM
வெப்படை அருகே
வீட்டுக்குள் புகுந்த பாம்பு
பள்ளிப்பாளையம், அக். 11-
வெப்படை அடுத்த மேட்டுக்கடை பகுதியில், தொழிலாளி வீட்டில் புகுந்த நாகப்பாம்பு
உயிருடன் பிடிக்கப்பட்டது.
பள்ளிப்பாளையம், வெப்படை அடுத்த மேட்டு கடையை சேர்ந்தவர் துரைசாமி, 45. இவரது வீட்டில் நேற்று முன்தினம் இரவு, ஐந்து அடி நீளமுள்ள நாகப்பாம்பு புகுந்துள்ளது. இதை பார்த்த துரைசாமி, வெப்படை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். வெப்படை தீயணைப்பு நிலைய அலுவலர் வெங்கட்வேலு தலைமையில், வீரர்கள் விரைந்து வந்து, நீண்ட நேரம் போராட்டத்திற்கு பிறகு, வீட்டில் பதுங்கி இருந்த பாம்பை உயிருடன் பிடித்தனர். பிடிக்கப்பட்ட பாம்பை, ஆளில்லாத காட்டு பகுதியில் விட்டனர்.