/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
மா.திறனாளிகளுக்கு சிறப்பு மருத்துவ முகாம் 92 பேருக்கு ரூ.19 லட்சத்தில் உதவி
/
மா.திறனாளிகளுக்கு சிறப்பு மருத்துவ முகாம் 92 பேருக்கு ரூ.19 லட்சத்தில் உதவி
மா.திறனாளிகளுக்கு சிறப்பு மருத்துவ முகாம் 92 பேருக்கு ரூ.19 லட்சத்தில் உதவி
மா.திறனாளிகளுக்கு சிறப்பு மருத்துவ முகாம் 92 பேருக்கு ரூ.19 லட்சத்தில் உதவி
ADDED : செப் 29, 2024 01:32 AM
மா.திறனாளிகளுக்கு சிறப்பு மருத்துவ முகாம்
92 பேருக்கு ரூ.19 லட்சத்தில் உதவி
ராசிபுரம், செப். 29-
ராசிபுரம் அருகே நடந்த மாற்றுத்திறனாளிகள் சிறப்பு மருத்துவ முகாமில், 92 பேருக்கு, 19 லட்சம் ரூபாய் மதிப்பில் உதவிகள் வழங்கப்பட்டன.
ராசிபுரம் ஒன்றியம், வடுகம் அரசு பள்ளியில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம், நேற்று நடந்தது. ஒன்றிய தலைவர் ஜெகநாதன் முன்னிலை வகித்தார். மாவட்ட கலெக்டர் உமா முகாமை தொடங்கி வைத்து பேசியதாவது:
மாற்றுத்திறனாளிகளுக்கு மாதாந்திர உதவித்தொகையை உயர்த்தி வழங்கி, பெட்ரோல் ஸ்கூட்டர், காதொலி கருவிகள், பேட்டரியால் இயங்கும் சிறப்பு சக்கர நாற்காலி, கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடு கட்ட ஆணை வழங்குவது உள்ளிட்ட திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. மேலும், மாதந்தோறும் ஒவ்வொரு வட்டத்திலும் மாற்றுத்திறனாளிகளுக்கான முகாம்களை நடத்தி அவர்களுக்கு தேவையான நலத்திட்டங்களை வழங்கிட உத்தரவிட்டுள்ளனர்.
மாற்றுத்திறனாளிகள் அரசின் திட்டங்கள், மருத்துவ காப்பீடு அட்டை, உதவித்தொகை பெற அடையாள அட்டை மிகவும் அவசியம். கடந்தாண்டு நாமக்கல் மாவட்டத்தில், 8 வட்டங்களில் நடத்தப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான முகாம்களில், 2,450 மாற்றுத்திறனாளிகள் புதிய பயனாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர். மாற்றுத்திறனாளிகளுக்கு அரசின் திட்டங்களை கொண்டு சேர்க்கும் விதமாக அனைத்து வட்டங்களிலும் மாற்றுத்திறனாளிகள் பயன்பெறும் வகையில் அவர்கள் வசிக்கும் பகுதிகளுக்கு அருகே முகாம் நடத்தப்பட உள்ளது. இம்முகாம்களை மாற்றுத்திறனாளிகள் அனைவரும் பயன்படுத்திக்கொண்டு பயன்பெற வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
தொடர்ந்து, பேட்டரி வாகனம், காதொலி இயந்திரம் உள்பட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. 92 மாற்றுத்திறனாளிகளுக்கு, 19.06 லட்சம் ரூபாய் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.