/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
வழித்தட ஆக்கிரமிப்பை அகற்றாததை கண்டித்து கலெக்டர் ஆபீசில் திடீர் தர்ணாவால் பரபரப்பு
/
வழித்தட ஆக்கிரமிப்பை அகற்றாததை கண்டித்து கலெக்டர் ஆபீசில் திடீர் தர்ணாவால் பரபரப்பு
வழித்தட ஆக்கிரமிப்பை அகற்றாததை கண்டித்து கலெக்டர் ஆபீசில் திடீர் தர்ணாவால் பரபரப்பு
வழித்தட ஆக்கிரமிப்பை அகற்றாததை கண்டித்து கலெக்டர் ஆபீசில் திடீர் தர்ணாவால் பரபரப்பு
ADDED : டிச 09, 2025 05:20 AM

நாமக்கல்: நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அடுத்த ஆர்.புதுப்பட்டி கள்ளவழிக்கரடு கிராமத்தில், 20க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்கள் பயன்படுத்தி வந்த வழித்தட பாதையை, அப்பகுதியை சேர்ந்த சிலர் ஆக்கிரமித்துள்ளனர். இதுகுறித்து, பாதிக்கப்பட்டவர்கள் பலமுறை நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.
இந்நிலையில், பாதிக்கப்பட்ட நபர்கள், உரிய நடவடிக்கை எடுக்காததை கண்டித்து, நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில், நேற்று நடந்த மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில், ரேஷன்கார்டு, ஆதார் அட்டை, வாக்காளர் அட்டைகளை ஒப்படைக்க முயன்றனர். அவர்களுக்கு அதிகாரிகள் கொடுத்த பதில் திருப்தியாக இல்லாததால், கலெக்டர் அலுவலக கூட்டரங்கு முன் அமர்ந்து திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.அப்போது, பலமுறை மனு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதிகாரிகள் சிலர் ஆக்கிரமிப்பாளர்களுக்கு உடந்தையாக இருப்பதாகவும் குற்றம்சாட்டினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
* இதேபோல், ராசிபுரம் தாலுகா, ஊனாந்தாங்கல் கிராமத்தை சேர்ந்த நில புரோக்கர் சுப்ர மணி, நேற்று கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்தவர், திடீரென கலெக்டர் அலுவலக போர்டிகோ எதிரில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
அவர், 18 லட்சம் ரூபாய் முன்பணமாக பெற்றுக்கொண்டு, நிலத்தை கிரயம் செய்து கொடுக்க மறுக்கும், 3 பேர் மீது நடவடிக்கை எடுத்து, பத்திரப்பதிவு செய்ய உதவி செய்ய வேண்டும் என, வலியுறுத்தி கோஷம் எழுப்பினார். அவரிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அவற்றை ஏற்க மறுத்த சுப்ரமணி, நீண்ட நேரம் அங்கேயே தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

