/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
ஆவணி முதல் ஞாயிறு ஆஞ்சநேயருக்கு அபிஷேகம்
/
ஆவணி முதல் ஞாயிறு ஆஞ்சநேயருக்கு அபிஷேகம்
ADDED : ஆக 18, 2025 03:23 AM
நாமக்கல்: நாமக்கல் நகரின் மையத்தில், நரசிம்ம சுவாமி, நாமகிரித்தாயார் கோவில் எதிரே, ஆஞ்சநேயர் கோவில் அமைந்துள்ளது. இங்கு வணங்கிய நிலையில் சாந்த சொரூபியாக ஆஞ்சநேயர், பக்தர்க-ளுக்கு அருள்பாலிக்கிறார். சுவாமிக்கு, ஆஞ்சநேயர் ஜெயந்தி, தமிழ் மாத முதல் ஞாயிறு, தமிழ், ஆங்கில வருட பிறப்பு, ஏகா-தசி உள்ளிட்ட முக்கிய நாட்களில் சிறப்பு அபிஷேகம், தங்கம், முத்தங்கி, வடை மாலை, சந்தனம், வெண்ணை, வெற்றிலை உள்ளிட்ட பல்வேறு அலங்காரங்கள் செய்யப்படும்.
அந்தவகையில், ஆவணி முதல் ஞாயிறான நேற்று, ஆஞ்சநேய-ருக்கு வடை மாலை அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு பூஜை நடந்தது. தொடர்ந்து, காலை 10:00 மணிக்கு, பஞ்சாமிர்தம், நல்-லெண்ணெய், பால், தயிர், மஞ்சள், சந்தனம் உள்ளிட்ட நறுமண பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து சுவா-மிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. மதியம், 1:00 மணிக்கு திரை விலக்கப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது. தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. பல்வேறு பகுதிகளில் இருந்து குடும்பத்துடன் கோவிலுக்கு வந்த பக்-தர்கள், நீண்ட வரிசையில் நின்று சுவாமியை வழிபட்டனர்.