/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
தலைமறைவு குற்றவாளி ஜூலை 14ல் ஆஜராக உத்தரவு
/
தலைமறைவு குற்றவாளி ஜூலை 14ல் ஆஜராக உத்தரவு
ADDED : ஜூன் 16, 2025 07:33 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நாமக்கல்: மல்லசமுத்திரம் நெசவாளர் காலனியை சேர்ந்தவர் சுப்ரமணி மகன் தேவராஜ், 23; இவர் மீது, நாமக்கல் போலீஸ் ஸ்டேஷனில் திருட்டு வழக்கு ஒன்று பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணை, நாமக்கல் முதலாவது குற்றவியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
ஆனால், தேவராஜ் வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வருகிறார். அதனால், நீதிமன்றம் தேவராஜை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்துள்ளது. மேலும், 'வரும், ஜூலை, 14க்குள் அவர் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும். இல்லை என்றால், போலீசார் அவரை பிடித்து ஆஜர் படுத்த வேண்டும்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.