/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
தலைமறைவு குற்றவாளிகள் அக்., 22ல் ஆஜராக உத்தரவு
/
தலைமறைவு குற்றவாளிகள் அக்., 22ல் ஆஜராக உத்தரவு
ADDED : செப் 17, 2025 01:50 AM
நாமக்கல் :நாமக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட பெரியப்பட்டி எம்.ஜி.ஆர்., நகர் நரிக்குறவர் காலனியை சேர்ந்தவர் மாறன், 50; இவர் மீது, நாமக்கல் போலீஸ் ஸ்டேஷனில், 2015ல், வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணை, நாமக்கல் முதலாவது குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
ஆனால், மாறன் இரண்டு ஆண்டுகளாக விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வருகிறார். அதனால், நீதிமன்றம் அவரை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்துள்ளது. அவர், வரும் அக்., 22 காலை, 10:00 மணிக்குள் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும். இல்லை என்றால் போலீசார் அவரை பிடித்து ஆஜர்படுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், நாமக்கல் அருகே உள்ள செங்காளி கவுண்டனுாரை சேர்ந்தவர் முத்துகுமார், 30. இவர் மீதும், 2007ல் நாமக்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். இவரும், இரண்டு ஆண்டுகளாக வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்து வருவதால், இவரையும் நீதிமன்றம் தேடப்படும் குற்றவாளியாக அறிவித்துள்ளது. அவர் வரும், அக்., 22 காலை, 10:00 மணிக்குள் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும். இல்லை என்றால், போலீசார் அவரை பிடித்து ஆஜர்படுத்த வேண்டும் என, நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.