sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

லாரி மீது சரக்கு வேன் மோதி 2 வாலிபர்கள் பரிதாப பலி

/

லாரி மீது சரக்கு வேன் மோதி 2 வாலிபர்கள் பரிதாப பலி

லாரி மீது சரக்கு வேன் மோதி 2 வாலிபர்கள் பரிதாப பலி

லாரி மீது சரக்கு வேன் மோதி 2 வாலிபர்கள் பரிதாப பலி


ADDED : டிச 14, 2024 03:04 AM

Google News

ADDED : டிச 14, 2024 03:04 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல்: பூ லோடு ஏற்றிச்சென்ற சரக்கு வேன், லாரியின் பின்னால் அதி-வேகத்தில் மோதிய விபத்தில், 2 வாலிபர்கள் சம்பவ இடத்தி-லேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் இருந்து பூ லோடு ஏற்றிக்-கொண்டு, 'மகேந்திரா தோஸ்த்' சரக்கு வேன் ஒன்று, திண்டுக்கல் நோக்கி நாமக்கல் வழியாக சென்று கொண்டிருந்தது.

வாகனத்தை, திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அடுத்த சிலுக்குவார்பட்டியை சேர்ந்த உரிமையாளரும் டிரைவருமான சக்-திவேல், 28, ஓட்டி வந்தார். சரக்கு வேனில், அதே பகுதியை சேர்ந்த நாகராஜ், 25, விக்னேஷ், 25 ஆகிய இருவரும் வந்தனர்.

சரக்கு வேன், நேற்று அதிகாலை, 2:00 மணிக்கு, சேலம் - நாமக்கல் சாலை, பாப்பிநாயக்கன்பட்டி அருகே அதிவேகத்தில் சென்று கொண்டிருந்தது. அப்போது, முன்னாள் சென்று கொண்டி-ருந்த லாரியின் பின்னால், சரக்கு வேன் அதிவேகத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் சரக்கு வேனில் அடுக்கி வைக்கப்பட்-டிருந்த பூ பெட்டிகள் துாக்கி வீசப்பட்டு லாரியில் சென்று விழுந்-தன. மேலும், சாலை முழுவதும் பூக்களாக சிதறிக்கிடந்தன.இந்த கோர விபத்தில் சரக்கு வேன் அப்பளம் போல் நொறுங்கி-யது. இதில் சிக்கிய நாகராஜ், விக்னேஷ் ஆகிய இருவரும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். படுகா-யமடைந்த டிரைவர் சக்திவேலை, அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு நாமக்கல் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து, நல்லிபாளையம் போலீசார் விசாரிக்கின்-றனர்.






      Dinamalar
      Follow us