/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
விவேகானந்தா கல்வி நிறுவனங்களில் சாதனையாளர் தினம் கொண்டாட்டம்
/
விவேகானந்தா கல்வி நிறுவனங்களில் சாதனையாளர் தினம் கொண்டாட்டம்
விவேகானந்தா கல்வி நிறுவனங்களில் சாதனையாளர் தினம் கொண்டாட்டம்
விவேகானந்தா கல்வி நிறுவனங்களில் சாதனையாளர் தினம் கொண்டாட்டம்
ADDED : ஏப் 21, 2025 07:38 AM
திருச்செங்கோடு: திருச்செங்கோடு விவேகானந்தா கல்வி நிறுவனங்களில், சாதனையாளர் தின விழா கொண்டாடப்பட்டது. விவேகானந்தா கல்வி நிறுவனங்களின் சேர்மன் கருணாநிதி தலைமை வகித்தார். நிர்வாக இயக்குனர் கிருஷ்ணவேணி கருணாநிதி, குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். இணை நிர்வாக இயக்குனர் அர்த்தநாரீஸ்வரன், இணை செயலாளர் ஸ்ரீராகாநிதி அர்த்தநாரீஸ்வரன், துணைத்தலைவர் கிருபாநிதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
வேலைவாய்ப்பு நிர்வாகி சரவணன், வருடாந்திர வேலைவாய்ப்பு அறிக்கைகளை வழங்கினார். தலைமை விருந்தினர் உதயசங்கர், 1,621 மாணவிகளுக்கு பரிசு, பதக்கம் வழங்கி பேசினார். அப்போது, 'நெட்வொர்க்கிங் திறன், வலுவான மற்றும் பணிவான குணம், கூட்டுத்திறன்கள், நேர மேலாண்மை ஆகியவை கார்ப்பரேட் உலகில் வெற்றி பெற அவசியமான திறன்கள்' என தெரிவித்தார்.
கல்லுாரி செயல் இயக்குனர் குப்புசாமி, முதன்மை செயல் அலுவலர் சொக்கலிங்கம், ஆராய்ச்சி இயக்குனர் பாலகுருநாதன், செயல் அலுவலர் ராஜேந்திரன், திறன் மேம்பாட்டு இயக்குனர் குமரவேல், சேர்க்கை இயக்குனர் சவுண்டப்பன் மற்றும் கல்லுாரி முதல்வர்கள், துறை தலைவர்கள், பேராசிரியர்கள் வாழ்த்தி பேசினர்.

