/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
தும்மங்குட்டை ஆற்றின் குறுக்கே பாலம் கட்ட நடவடிக்கை தேவை
/
தும்மங்குட்டை ஆற்றின் குறுக்கே பாலம் கட்ட நடவடிக்கை தேவை
தும்மங்குட்டை ஆற்றின் குறுக்கே பாலம் கட்ட நடவடிக்கை தேவை
தும்மங்குட்டை ஆற்றின் குறுக்கே பாலம் கட்ட நடவடிக்கை தேவை
ADDED : டிச 26, 2025 05:30 AM
எருமப்பட்டி: எருமப்பட்டி அருகே, பொட்டிரெட்டி பூங்காற்றின் குறுக்கே பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எருமப்பட்டி யூனியன், பொட்டிரெட்டிபட்டி பஞ்.,ல், 8 ஏக்கர் பரப்பளவில் தும்மங்குட்டை உள்ளது. இந்த குட்டையில் உள்ள தண்ணீரால், 300 ஏக்கருக்கு மேல் விவசாய நிலங்கள் பயன் பெற்று வருகிறது. இந்நிலையில் கடந்த 6 ஆண்டுகளாக, கொல்லிமலையில் நல்ல மழை பெய்து வருவதால், மலையில் இருந்து வரும் தண்ணீர் அடிவாரத்தில் உள்ள ஏரியாகள் நிறைந்து, பூங்காற்றின் வழியாக பெட்டிரெட்டிபட்டி, தும்மங்குட்டைக்கு தண்ணீர் வருகிறது. இந்த தண்ணீர் வரும் ஆறு, விவசாய நிலங்களுக்கு நடுவில் உள்ளதால், தண்ணீர் வரும் போது இப்பகுதி விவசாயிகள் ஆற்றை கடக்க முடியாமல் அவதிப்படுகின்றனர். மேலும், கால்நடைகளை வயலுக்கு மேய்ச்சலுக்கு அழைத்து செல்ல, ஆற்றில் இறங்கி செல்லும் நிலை உள்ளதால் சிரமப்படுகிறனர். எனவே, மழை காலம் துவங்கும் முன் தும்மங்குட்டை ஆற்றில் பாலம் அமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

