/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
கூடுதல் ஓட்டுப்பதிவு இயந்திரம் வருகை
/
கூடுதல் ஓட்டுப்பதிவு இயந்திரம் வருகை
ADDED : ஏப் 07, 2024 03:42 AM
நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் உள்ள, 6 சட்டசபை தொகுதிகளுக்கான ஓட்டுச்சாவடிகளில் பயன்படுத்துவதற்காக, தேர்தல் ஆணையத்தால், 3,995 ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், 2,316 கட்டுப்பாட்டு இயந்திரங்கள், 2,301 'விவிபேட்' இயந்திரங்கள் வழங்கப்பட்டு, நாமக்கல் மாவட்ட கலெக்டர் பெருந்திட்ட வளாகத்தில் உள்ள மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திர கிடங்கில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.
நாமக்கல் லோக்சபா தொகுதியில், 40 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதையடுத்து, ஓட்டுச்சாவடிகளில் கூடுதல் பயன்பாட்டிற்காக, காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருந்து, 1,670 மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வரவழைக்கப்பட்டுள்ளன. அவை, கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திர கிடங்கு பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டன.
இந்நிலையில், கூடுதலாக வரப்பெற்ற, 1,670 மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களின் முதல் நிலை சரிபார்க்கும் பணி பொறியாளர்கள் மூலம், அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சி பிரமுகர்கள் முன்னிலையில், நேற்று மேற்கொள்ளப்பட்டது. நாமக்கல் மாவட்ட தேர்தல் அலுவலர் உமா, தேர்தல் பொது பார்வையாளர் ஹர்குன்ஜித்கவுர் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

