/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
ஆதாரில் பெயர்களை சரிபார்க்க பிளஸ் 2 மாணவர்களுக்கு அறிவுரை
/
ஆதாரில் பெயர்களை சரிபார்க்க பிளஸ் 2 மாணவர்களுக்கு அறிவுரை
ஆதாரில் பெயர்களை சரிபார்க்க பிளஸ் 2 மாணவர்களுக்கு அறிவுரை
ஆதாரில் பெயர்களை சரிபார்க்க பிளஸ் 2 மாணவர்களுக்கு அறிவுரை
ADDED : டிச 08, 2025 09:17 AM
ராசிபுரம்: தேசிய அளவிலான நுழைவுத்தோர்வு எழுதும் பிளஸ் 2 மாணவர்கள், ஆதாரில் பெயர், பிறந்த தேதியை சரிபார்க்க அறிவுரை வழங்கப்பட்டுள்-ளது.
என்.டி.ஏ., எனப்படும் தேசிய தேர்வு முகமை, 'நீட்', ஜே.இ.இ., கியூட் உள்ளிட்ட தேசிய அளவிலான உயர்கல்வி படிப்புகளில் சேர நுழைவுத்தேர்வை நடத்தி வருகிறது. சமீபத்தில் என்.டி.ஏ., வெளி-யிட்டுள்ள சுற்றறிக்கையில் நுழைவுத்தேர்வு எழுதும் மாணவர்கள், 10ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழில் உள்ளபடி பெயர், பிறந்த தேதி, தந்தை பெயர் ஆகியவை இருக்க வேண்டும்.
சமீபத்தில் எடுத்த போட்டோ இருக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகள், யு.டி.ஐ.டி., கார்டை புதுப்-பித்திருக்க வேண்டும். ஓ.பி.சி., இ.டபிள்யூ.எஸ்., உள்ளிட்ட இட ஒதுக்கீடு கோருபர்கள் சான்றி-தழ்கள் புதுப்பிக்கப்பட்டு நடப்பில் இருக்க வேண்டும் என, குறிப்பிட்டுள்ளனர்.
இதுகுறித்து, கல்வியாளர் கார்த்தீஸ்வரன் கூறி-யதாவது:
கடந்த காலங்களில், என்.டி.ஏ., நடத்தும் நுழை-வுத்தேர்வுகளில் நல்ல மதிப்பெண் பெற்ற மாண-வர்களின் ஆதார் தவறுகள், இட ஒதுக்கீடு சான்றி-தழ்கள் புதுப்பிப்பது உள்ளிட்ட தவறுகளால் கடைசி நேரத்தில் மிகவும் சிரமப்பட்டனர். கல்-லுாரிகளில் இடஒதுக்கீடு கிடைத்தும் மேற்கண்ட சான்றிதழ்களில் உள்ள தவறுகளால் சேர்க்-கையை உறுதிசெய்ய முடியவில்லை. இதனால், இந்த முறை என்.டி.ஏ., நுழைவுத்தேர்வு தொடங்கும் முன்பே இதுகுறித்து எச்சரித்துள்-ளது.
எனவே, பிளஸ் 2 படிக்கும் மாணவர்கள், தங்க-ளது ஆதாரை சரிபார்த்து, பத்தாம் வகுப்பு சான்றி-தழில் உள்ளபடி பெயர், பிறந்த தேதி, பெற்றோர் பெயர்களை மாற்றிக்கொள்ள வேண்டும். முன்-னுரிமை கோருபவர்கள் அந்தந்த சான்றிதழ்களை புதுப்பித்து அதிலும், ஆதாரில் உள்ளபடி பெயர்-களை சரி செய்து வைத்துக்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

