/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
கொல்லிமலை நம் அருவியில் குவிந்த சுற்றுலா பயணிகள்
/
கொல்லிமலை நம் அருவியில் குவிந்த சுற்றுலா பயணிகள்
ADDED : டிச 08, 2025 09:18 AM

சேந்தமங்கலம்: நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை சுற்றுலா தலமாக விளங்குகிறது. இந்த மலைக்கு சென்ற-டைய, அடிவார பகுதியான காரவள்ளியில் இருந்து, 70 கொண்டை ஊசி வளைவுகளை கடந்து செல்ல வேண்டும். வார விடுமுறையை தங்களது குடும்பம் மற்றும் நண்பர்களுடன் குதுா-கலமாக கொண்டாட, கொல்லிமலைக்கு சுற்-றுலா பயணிகள் படையெடுத்து வருகின்றனர்.
ஒவ்வொரு வாரமும், சனிக்கிழமை இரவில் இருந்து ஞாயிறு காலை வரை தொடர்ந்து டூவீலர் மற்றும் கார் போன்ற வாகனங்களில் தொடர்ந்து சுற்றுலா பயணிகள் கொல்லிமலை நோக்கி செல்வர். கடந்த, இரண்டு வாரங்களாக புயலின் தாக்கத்தால் குறைந்த அளவிலான சுற்-றுலா பயணிகள் மட்டும் கொல்லிமலைக்கு வந்-திருந்தனர். தற்போது, மழை இல்லாததால் சுற்-றுலா பயணிகள் எண்ணிக்கை அதிகரித்து காணப்பட்டது. அவர்கள், நம் அருவியில் குளித்து
குதுாகலமடைந்தனர். மேலும், படகு இல்லத்தில் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர்.

