sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 08, 2025 ,கார்த்திகை 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

காவிரி ஆற்றில் மணல் திருட்டு வருவாய் துறையினர் பறிமுதல்

/

காவிரி ஆற்றில் மணல் திருட்டு வருவாய் துறையினர் பறிமுதல்

காவிரி ஆற்றில் மணல் திருட்டு வருவாய் துறையினர் பறிமுதல்

காவிரி ஆற்றில் மணல் திருட்டு வருவாய் துறையினர் பறிமுதல்


ADDED : டிச 08, 2025 09:18 AM

Google News

ADDED : டிச 08, 2025 09:18 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ப.வேலுார்: ப.வேலுார் காவிரி ஆற்றில் இருந்து மணல் திருடி, விற்பனைக்கு பதுக்கி வைத்திருந்த, 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள மணலை, வருவாய்த்-துறையினர் பறிமுதல் செய்தனர்.

ப.வேலுார் அருகே, நன்செய் இடையாறு பகுதி-களில் உள்ள காவிரி ஆற்றில், இரவு, 11:00 மணி முதல் அதிகாலை, 3:00 மணி வரை மணல் கொள்ளை நடக்கிறது. டூவீலரில் மூட்டை கட்டி நன்செய் இடையாறு பகுதிகளில் மணலை பதுக்கி வைத்து, ப.வேலுார் சுற்றுவட்டார பகுதிக-ளுக்கு விற்பனை செய்து வருகின்றனர். இதுகு-றித்து, அப்பகுதி பொதுமக்கள், ப.வேலுார்

போலீ-சாருக்கு பலமுறை புகாரளித்தும், கண்டுகொள்-ளாததால், வருவாய்த்துறை அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்தனர்.

நேற்று இரவு, 8:00 மணிக்கு, மோகனுார் தாசில்தார் மதியழகன் தலைமையில், ஆர்.ஐ., ராமசாமி, வி.ஏ.ஓ., உத்திரராஜன், நன்செய் இடை-யாறு வி.ஏ.ஓ., அரவிந்தன் ஆகியோர், நன்செய் இடையாறு பகுதிகளில் சோதனை மேற்கொண்-டனர். அப்போது, நன்செய் இடையாறு, ஈஸ்-வரன் கோவில் அருகே உள்ள தெப்பக்குளம், அதே பகுதியில் உள்ள குமரி அம்மன் கோவில் மற்றும் ராஜா வாய்க்கால் கரையோர பகுதி-களில், விற்பனைக்கு பதுக்கி வைத்திருந்த, 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள காவிரி மணலை பறி-முதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us