ADDED : மே 19, 2025 02:06 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நாமக்கல்: ''தமிழகத்தில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றும் வலிமையான அணியுடன் கூட்டணி,'' என, தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேர-வையின் நிறுவன தலைவர் தனியரசு தெரிவித்தார்.
இலங்கை முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்ட ஈழத்த-மிழர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை சார்பில், அதன் நிறுவன தலைவர் தனியரசு தலைமையில் அக்கட்சியினர், நேற்று நாமக்கல்லில் மெழுகு-வர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர். பின், தனியரசு கூறுகையில், ''வரும், 2026 சட்டசபை தேர்தலில் கூட்டணி அமைத்து போட்-டியிடுவது தொடர்பாக அ.தி.மு.க., - தி.மு.க.,வுடன் பேச்சு-வார்த்தை நடந்து வருகிறது. கட்சியின் நிர்வாக குழு கூட்டம் கூடி கூட்டணி குறித்து முடிவு எடுக்கப்படும். ஆட்சி அதிகா-ரத்தை கைப்பற்றும் வலிமையான அணியுடன் கூட்டணி அமைக்-கப்படும்,'' என்றார்.