/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
விபத்தில் ஆம்புலன்ஸ் உரிமையாளர் பலி
/
விபத்தில் ஆம்புலன்ஸ் உரிமையாளர் பலி
ADDED : ஆக 20, 2025 01:53 AM
சேந்தமங்கலம், எருமப்பட்டி, பழனி நகரை சேர்ந்தவர் ரஞ்சித்குமார், 31; இவர் சொந்தமாக ஆம்புலன்ஸ் வைத்துள்ளார். இவர் நண்பர்களுடன், நேற்று முன்தினம் இரவு, கொல்லிமலை செங்கரை கிராமத்தில் நடந்த கபடி போட்டியை பார்ப்பதற்காக டூவீலரில் சென்றுள்ளார். அங்கு போட்டி முடிந்ததும், நேற்று அதிகாலை அவர்கள் டூவீலரில் ஊருக்கு புறப்பட்டனர்.
அப்போது வரும் வழியில் எதிர்பாராத விதமாக ரஞ்சித் ஓட்டிவந்த டூவீலர், பள்ளத்தில் இறங்கி விபத்துக்குள்ளானது. இதில், பலத்த காயமடைந்த ரஞ்சித்குமாரை, அவர்களது நண்பர்கள் மீட்டு அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்ததில், அவர் இறந்தது தெரியவந்தது. இதுகுறித்து செங்கரை போலீசார் விசாரிக்கின்றனர்.