/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
கல்லீரல் விற்ற பெண்ணுக்கு மருத்துவ பரிசோதனை
/
கல்லீரல் விற்ற பெண்ணுக்கு மருத்துவ பரிசோதனை
ADDED : ஆக 20, 2025 01:52 AM
பள்ளிப்பாளையம், பள்ளிப்பாளையம் அருகே, அலமேடு பகுதியை சேர்ந்தவர் பேபி, 37; இவர் கடன் தொல்லையால் கிட்னி விற்க முடிவு செய்துள்ளார். ஆனால், கிட்னியை மாற்றி பொருத்த முடியாது என்பதால், கல்லீரலை விற்குமாறு புரோக்கர்கள் நெருக்கடி கொடுத்துள்ளனர். இதற்காக, 8 லட்சம் ரூபாய் பேரம் பேசி, 4.50 லட்சம் ரூபாய் கொடுத்துள்ளனர்.
இந்நிலையில், கடந்த, 17ல் பேபி, கல்லீரலை விற்றதால், தற்போது எந்த வேலையும் செய்ய முடியவில்லை, உடல் பலவீனமாக உள்ளது. எனக்கு அரசு, மருத்து உதவி செய்ய வேண்டும் என, கோரிக்கை வைத்தார். இதையடுத்து, நேற்று பள்ளிப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு வந்த பேபிக்கு, மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.
இதுகுறித்து, டாக்டர் வீரமணி கூறுகையில், ''கல்லீரல் விற்பனை செய்த பெண், நேற்று மதியம் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வந்தார். அவருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. வயிறுப்பகுதிக்கு ஸ்கேன் எடுக்க, ஈரோடு அரசு மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்பட்டது. இந்த ஸ்கேன் முடிவு வந்தவுடன், அதற்கு தகுந்தார்போல் சிகிச்சை அளிக்கப்படும்,'' என்றார்.