/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
இ.பி.எஸ்., உதவியாளர் வீட்டில் புகுந்த மேலும் ஒருவர் சிக்கினார்
/
இ.பி.எஸ்., உதவியாளர் வீட்டில் புகுந்த மேலும் ஒருவர் சிக்கினார்
இ.பி.எஸ்., உதவியாளர் வீட்டில் புகுந்த மேலும் ஒருவர் சிக்கினார்
இ.பி.எஸ்., உதவியாளர் வீட்டில் புகுந்த மேலும் ஒருவர் சிக்கினார்
ADDED : பிப் 21, 2024 01:38 AM
ராசிபுரம்,:நாமக்கல் மாவட்டம், நாமகிரிப்பேட்டை நாரைக்கிணறு பகுதியை சேர்ந்தவர் அருண்பிரகாஷ், 32; முன்னாள் முதல்வர் இ.பி.எஸ்., உதவியாளர். இவர் சேலத்தில் தங்கியுள்ளார். இவரது குடும்பத்தினர், நாரைக்கிணறு பகுதியில் உள்ள தோட்டத்து வீட்டில் வசித்து வருகின்றனர். கடந்த, 9 நள்ளிரவு, 2 கார்களில் வந்த மர்ம நபர்கள், அருண் பிரகாஷ் வீட்டிற்குள் புகுந்து கொள்ளையடிக்க முயன்றனர்.
இதுகுறித்து வழக்கில், ஆயில்பட்டி போலீசார், 6 பேரை கைது செய்திருந்தனர். இந்நிலையில், தலைமைறவாக இருந்த திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளியை சேர்ந்த ஹபீபு ரஹ்மான் மகன் ஜாகீர் உசேன், 42, என்பவரை நேற்று கைது செய்து, சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். இத்துடன் கைது எண்ணிக்கை, 7ஆக உயர்ந்துள்ளது.