/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
ஒப்பந்த அடிப்படையில் காலி பணியிடம் தகுதியானோர் விண்ணப்பிக்க அழைப்பு
/
ஒப்பந்த அடிப்படையில் காலி பணியிடம் தகுதியானோர் விண்ணப்பிக்க அழைப்பு
ஒப்பந்த அடிப்படையில் காலி பணியிடம் தகுதியானோர் விண்ணப்பிக்க அழைப்பு
ஒப்பந்த அடிப்படையில் காலி பணியிடம் தகுதியானோர் விண்ணப்பிக்க அழைப்பு
ADDED : ஜூலை 24, 2025 01:40 AM
நாமக்கல்,
'தேசிய நலவாழ்வு குழுமத்தின் கீழ் புதிதாக ஒப்பளிக்கப்பட்ட பணியிடங்கள், ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளதால், தகுதியான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது' என, நாமக்கல் கலெக்டர் துர்கா மூர்த்தி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை:
--------------நாமக்கல் மாவட்டத்தில், தேசிய நலவாழ்வு குழுமத்தின் கீழ், புதிதாக ஒப்பளிக்கப்பட்ட பணியிடங்கள் மற்றும் பல்வேறு திட்டங்களில், ஒப்பந்த அடிப்படையில் காலியாக உள்ள பணிக்கு, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
அதன்படி, துணை செவிலியர், பல்நோக்கு சுகாதார பணியாளர் (பெண்) -6, மருந்தாளுனர் ஒன்று, ஆய்வக தொழில்நுட்ப வல்லுனர், ஒன்று, செவிலியர், -86, பல்நோக்கு மருத்துவமனை பணியாளர், துணை பணியாளர், -3, தொழில்முறை சிகிச்சையாளர், ஒன்று, சமூக சேவகர், ஒன்று, நடத்தைக்கான சிகிச்சை சிறப்பு கல்வியாளர், ஒன்று, ஆய்வக தொழில் நுட்ப வல்லுனர் நிலை, 3ல், ஒன்று ஆகிய பணியிடங்களுக்கு, ஒப்பந்த அடிப்படையில், தேசிய நலவாழ்வு குழும விதிகளின்படி, முற்றிலும் தற்காலிகமாக மாவட்ட நலவாழ்வு சங்கத்தின் மூலம் நிரப்பப்பட உள்ளது.
இப்பதவிகளுக்குரிய வயது வரம்பு, கல்வித்தகுதி மற்றும் இதர தகவல்கள், நாமக்கல் மாவட்ட இணையதளம் (namakkal.nic.in), கலெக்டர் அலுவலகம், மாவட்ட சுகாதார அலுவலர் அலுவலகம், நாமக்கல் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை ஆகிய இடங்களில் அறிவிப்பு பலகையில் வெளியிடப்பட உள்ளது. மேற்படி பதவிகளுக்கு, தகுதி வாய்ந்த நபர்கள் உரிய படிவத்தில், கல்வித்தகுதி, அனுபவச்சான்று மற்றும் இதர ஆவணங்களுடன் விண்ணப்பத்தை நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ, வரும் ஆக., 4, மாலை, 5:00 மணிக்குள், 'மாவட்ட சுகாதார அலுவலர், நிர்வாக செயலாளர், மாவட்ட நலவாழ்வு சங்கம், கலெக்டர் அலுவலக வளாகம், நாமக்கல் மாவட்டம்--637003' என்ற முகவரிக்கு விண்ணப்பிக்கலாம்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.