/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
கோவில் திருவிழாக்களால் அரளி பூ விலை உயர்வு
/
கோவில் திருவிழாக்களால் அரளி பூ விலை உயர்வு
ADDED : நவ 03, 2025 03:31 AM
வெண்ணந்துார்: வெண்ணந்துார் சுற்று வட்டாரத்தில் உள்ள மின்னக்கல், ஏ.கவுண்-டம்பாளைம், பொன்பரப்பிப்பட்டி, கோம்பைக்காடு, நெ.3.கொமராபாளையம், தொட்டியவலசு, பல்லவநாய்க்கன்-பட்டி, குட்டலாடம்பட்டி, தேங்கல்பாளையம், கல்லாங்குளம், ஆர்.புதுப்பாளையம், கட்டனாச்சம்பட்டி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் பரவலாக அரளி பூ சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்-டுள்ளனர்.
இப்பகுதியில் அறுவடை செய்யப்படும் பூக்களை சேலம், நாமக்கல் போன்ற பகுதிகளுக்கு விற்பனை செய்ய அனுப்பி வைக்கின்றனர். போதமலை, சித்தர்மலை மற்றும் சிறுசிறு மலை குன்றுகள் அடி-வார பகுதிகள் என்பதாலும், பூக்கள் பெரியதாக, அடர்த்தியாக இருக்கும் என்பதால், வியாபாரிகள் நேரடியாக தோட்டங்களுக்கே சென்று வாங்கி செல்கின்றனர்.
சில வாரங்களுக்கு முன், ஒருகிலோ அரளி, 40 ரூபாய் முதல், 80 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. ஐப்பசி மாதம் தொடங்கி உள்ளதால், ராசிபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் உள்ள மாரியம்மன் கோவில்களில் திருவிழாக்கள் தொடங்கி-யதால், பூக்கள் தேவையும் அதிகரித்துள்ளது. தற்போது, ஒரு கிலோ அரளி, 220 ரூபாய் முதல், 240 ரூபாய் வரை விற்கப்படுகி-றது. இதனால், பூ விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

