/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
மாநில அளவில் மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி
/
மாநில அளவில் மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி
ADDED : நவ 03, 2025 03:32 AM
குமாரபாளையம்: குமாரபாளையத்தில், தமிழ்நாடு அமெச்சூர் மல்யுத்த சங்கம் சார்பில், மாநில அளவிலான, 15 வயதிற்குட்பட்டோர் மல்-யுத்த சாம்பியன்ஷிப் போட்டி நடந்தது. தமிழ்நாடு அமெச்சூர் மல்யுத்த சங்க பொதுச்செயலரும், தமிழ்நாடு ஒலிம்பிக் சங்க செயற்குழு உறுப்பினருமான லோகநாதன் தலைமை வகித்தார்.
எஸ்.எஸ்.எம்., கல்வி நிறுவன தலைவர் மதிவாணன் போட்-டியை தொடங்கி வைத்தார். இதில், நாமக்கல், கரூர், ஈரோடு, கடலுார் உள்ளிட்ட, 25க்கும் மேற்பட்ட மாவட்டங்களிலிருந்து, 250க்கும் மேற்பட்ட மல்யுத்த வீரர், வீராங்கனைகள் பங்கேற்-றனர். 52 கிலோ எடைப்பிரிவில் கடலுார் பிரித்திவிராஜ், தங்கப்ப-தக்கம், நாமக்கல் மவுலீஸ்வரன், வெள்ளி பதக்கம் வென்றனர்.மகளிர் பிரிவில், 66 எடைப்பிரிவில் சேலம் ஹேசியா தங்கப்ப-தக்கம், நாமக்கல் சவுந்தர்யா, வெள்ளி பதக்கம், கிருஷ்ணகிரி அனுஸ்ரீ வெண்கல பதக்கம் வென்றனர். ஒட்டுமொத்த சாம்பி-யன்ஷிப் கோப்பையை, கடலுார் மாவட்டம், மல்யுத்த சங்க பொதுச்செயலர் கோடீஸ்வரன் பெற்றார்.

