/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
இன்று கும்பாபிஷேகம் பக்தர்கள் உற்சாகம்
/
இன்று கும்பாபிஷேகம் பக்தர்கள் உற்சாகம்
ADDED : நவ 03, 2025 03:32 AM
நாமகிரிப்பேட்டை: நாமகிரிப்பேட்டை ஒன்றியம், பச்சுடையாம்பாளையம் ஊராட்-சியில் மகா கணபதி, சக்தி மாரியம்மன், வெள்ளையம்மா, பொம்மியம்மா சமேத மதுரை வீரன், மகா காளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா, இன்று நடக்கிறது.
கடந்த வாரம், முளைப்பாரி போட்டு, கங்கனம் கட்டி விழா தொடங்கியது. நேற்று காலை, நாமகிரிப்பேட்டையில் இருந்து புனிதநீர் எடுத்துக்கொண்டு பெண்கள், பக்தர்கள் ஊர்வலமாக வந்தனர்.
சிறப்பு பூஜைக்கு பின், கோபுர கலசத்தில் தானியம் நிரப்பும் நிகழ்ச்சி நடந்தது. இரவு முதல்கால பூஜை தொடங்கியது. விக்-னேஷ்வர பூஜை, புன்யாஹ வாசனம், பஞ்சகவ்யம், 108 மூலிகை-களால் ஹோமம், தீபாரதனையை தொடர்ந்து பிரசாதம் வழங்கப்-பட்டது.
இன்று காலை, 7:00 மணிக்கு கடம் புறப்பாட்டிற்கு பின், புனித நீரை கலசத்தில் ஊற்றி கும்பாபிஷேகம் நடக்கிறது. தொடர்ந்து சிறப்பு பூஜை, தீபாராதனை, அன்னதானம் வழங்கப்
படும்.

