/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
அரளி பூக்கள் கிலோ ரூ.400க்கு விற்பனை
/
அரளி பூக்கள் கிலோ ரூ.400க்கு விற்பனை
ADDED : டிச 05, 2025 10:22 AM
சேந்தமங்கலம்: சேந்தமங்கலம் வட்டாரத்தில், அரளி பூக்களின் வரத்து குறைவால் விலை உயர்ந்து கிலோ, ரூ.400க்கு விற்றதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.
சேந்தமங்கலம் வட்டாரத்தில் உள்ள நடுக்கோம்பை, ராமநாதபுரம் புதுார், வாழவந்தி கோம்பை, பள்ளம்பாறை, நைனாமலை அடிவார பகுதிகளில் அரளி பூக்களை விவசாயிகள் சாகுபடி செய்துள்ளனர். இங்கு அறுவடை செய்யும் அரளி பூக்களை விவசாயிகள் சேலம், நாமக்கல், ஆத்துார் பகுதிகளுக்கு விற்பனைக்கு அனுப்பி வைக்கின்றனர்.
தற்போது தொடர் மழை மற்றும் அதிகாலை கடும் பனிப்பொழிவு உள்ளிட்ட காரணங்களால் பூக்களின் வரத்து குறைய தொடங்கியுள்ளது. அதே சமயம் ஐயப்பன் கோவில் சீசனாக உள்ளதால், பூக்களின் தேவையும் அதிகரித்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன் அரளி பூக்கள் கிலோ, 220 முதல் 240 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது. நேற்று ஒரு கிலோ அரளி, 400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

