/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
குடிக்க தண்ணீர் கேட்டு மூதாட்டியிடம் நகை பறிப்பு
/
குடிக்க தண்ணீர் கேட்டு மூதாட்டியிடம் நகை பறிப்பு
ADDED : அக் 24, 2024 01:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
எருமப்பட்டி, அக். 24-
எருமப்பட்டி யூனியன், வடவத்துாரை சேர்ந்தவர் லட்சுமி, 60. இவர், நேற்று முன்தினம் அங்குள்ள இந்தியன் வங்கியில் அடகு வைத்த, 2 பவுன் நகையை மீட்டு வீட்டிற்கு சென்றார். இதை நோட்டமிட்ட மர்மநபர், லட்சுமியின் வீட்டிற்கு சென்று குடிக்க தண்ணீர் கேட்டுள்ளார். லட்சுமி வீட்டிற்குள் சென்று தண்ணீர் எடுத்து வந்து கொடுத்தபோது, அவர் அணிந்திருந்த, 2 பவுன் நகையை பறித்துக்கொண்டு மர்ம நபர் தப்பி ஓடினார். இதையறிந்த அங்கிருந்தவர்கள் அவரை துரத்தியும் பிடிக்க முடியவில்லை. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.