/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
அரசு விதிமுறைப்படி சாய ஆலைகள் செயல்பட சங்க கூட்டத்தில் வலியுறுத்தல்
/
அரசு விதிமுறைப்படி சாய ஆலைகள் செயல்பட சங்க கூட்டத்தில் வலியுறுத்தல்
அரசு விதிமுறைப்படி சாய ஆலைகள் செயல்பட சங்க கூட்டத்தில் வலியுறுத்தல்
அரசு விதிமுறைப்படி சாய ஆலைகள் செயல்பட சங்க கூட்டத்தில் வலியுறுத்தல்
ADDED : டிச 16, 2024 03:17 AM
பள்ளிப்பாளையம்: பள்ளிப்பாளையம் சுற்று வட்டாரத்தில் ஏராளமான சாய ஆலைகள் செயல்படுகின்றன. இந்த சாய ஆலைகள், விதிமீறி சாயக்கழிவுநீரை வெளியேற்றி வருகின்றன.
இவ்வாறு வெளியேறும் சாயக்கழிவுநீர், காவிரி ஆற்றில் கலப்-பதால் ஆற்று தண்ணீர் மாசடைகிறது. மாசடைந்த தண்ணீரை பயன்படுத்தும் மக்களுக்கு கேன்சர், அலர்ஜி உள்ளிட்ட உடல் சார்ந்த பிரச்னைகள் ஏற்படுகின்றன. மேலும், சாயக்கழிவு நீரால், இ.ஆர்., தியேட்டர் பகுதியில் நிலத்தடி நீர், கடந்த மாதம் முற்-றிலும் பாதிக்கப்பட்டது. ஓடக்காடு பகுதியில், 10 ஏக்கர் நெல் வயலில் சாயக்கழிவுநீர் புகுந்து பயிர்கள் வீணாகின.இதையடுத்து, கடந்த, 9ல் திருச்செங்கோடு ஆர்.டி.ஓ., சுகந்தி தலைமையில், சாயக்கழிவுநீர் தடுப்பு ஆலோசனை கூட்டம் நடந்-தது. அதில், சாயக்கழிவுநீர் வெளியேற்றினால், சட்ட ரீதியாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, எச்சரிக்கை விடுத்தார். இந்நிலையில், நேற்று முன்தினம், பள்ளிப்பாளையம் சாய ஆலை உரிமையாளர்கள் சங்க கூட்டம், சங்க தலைவர் கந்தசாமி தலைமையில் நடந்தது.
இதில், சாய ஆலைகள் அரசு விதிமுறைப்படி செயல்பட வேண்டும். சாயக்கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை முழுமை-யாக இயக்கி, சாயக்கழிவுநீரை சுத்திகரிப்பு செய்ய வேண்டும். விதிமுறை மீறி சாய ஆலைகள் செயல்பட்டால், அதிகாரிகள் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என, தெரிவிக்கப்பட்டது.