/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
சுந்தரராஜ பெருமாளுக்கு புண்ணிய கால ஆராதனை
/
சுந்தரராஜ பெருமாளுக்கு புண்ணிய கால ஆராதனை
ADDED : ஆக 18, 2025 03:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ப.வேலுார்: ப.வேலுார் செட்டியார் தெருவில் உள்ள பிரசித்தி பெற்ற வல்-லவ கணபதி ஆலயத்தில் தேவி, பூதேவி, சமேத சுந்தரராஜ பெருமாளுக்கு, விஷ்ணுபதி புண்ணிய கால ஆராதனை விழா நேற்று நடந்தது.
ஆராதனையை முன்னிட்டு, நேற்று காலை, 6:00 மணிக்கு மங்கல இசையுடன், கலச வேள்வி தொடங்கியது. காலை 7:00 மணிக்கு சுந்தரராஜ பெருமாளுக்கு, 16 வகை வாசனை திரவியங்களால் அபிஷேகமும், 10:00 மணிக்கு சிறப்பு அலங்காரமும், ஆராதனையும் நடந்தது. சுற்றுவட்டாரத்தை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. அம்மையப்பர் அருட்பணி அறக்கட்டளை சார்பில், புண்ணிய கால ஆராதனை விழா ஏற்பாடுகளை செய்தி-ருந்தனர்.