/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
அரசு பள்ளி மாணவரை கவுரவித்த 'இஸ்ரோ'
/
அரசு பள்ளி மாணவரை கவுரவித்த 'இஸ்ரோ'
ADDED : ஆக 18, 2025 03:19 AM
ராசிபுரம்: ராசிபுரம் அடுத்த ரா.புதுபாளையம் அரசு மேல்நிலை பள்ளியில் பயிலும் மாணவன் பரணி ஹரிஷ். அறிவியல் ஆராய்ச்சியில் ஆர்வம் உள்ளவர். இந்திய ஏவுகணை அமைப்பான இஸ்ரோ மற்றும் பாதுகாப்பு துறையான டி.ஆர்.டி.ஓ., ஆகியவை சேர்ந்து, இந்திய அளவிலான ஆராய்ச்சி போட்டியை நடத்தின.
இதில், மாணவர் பரணி ஹரிஷ் ஏவுகணையின் வேகத்தை மேம்படுத்த, 'ஹைபர்சோனிக்' வேகத்தை விட அதிவேகமாக செல்லக்கூடிய தொழில்நுட்பம் குறித்து அனுப்பிய கட்டுரையை இஸ்ரோ பாராட்டியது. இதையடுத்து இந்த ஆண்டுக்கான இஸ்ரோ இளம் பாதுகாப்பு ஆர்கனைசேஷனுக்கு தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இஸ்ரோ கவுரவித்த மாணவரை ஆசிரி-யர்கள் பாராட்டினர். பெற்றோர் ஆசிரியர் கழக துணைத்தலைவர் நல்லதம்பி, சால்வை அணிவித்து பாராட்டினார்.