/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
அழுகிய நிலையில் கிடந்த ஆட்டோ டிரைவர் உடல் மீட்பு
/
அழுகிய நிலையில் கிடந்த ஆட்டோ டிரைவர் உடல் மீட்பு
ADDED : செப் 15, 2025 01:34 AM
குமாரபாளையம்:குமாரபாளையம், மேற்கு காலனியை சேர்ந்தவர் வெங்கடேசன், 49; ஆட்டோ டிரைவர். இவருக்கு குடிப்பழக்கம் உள்ளது. கடந்த, 12ல் குடியிருக்கும் வாடகை வீட்டில், மது போதையில் கதவை உள்புறம் தாழிட்டுக்கொண்டு துாங்க சென்றார். நேற்று மாலை, 6:00 மணியளவில் இவரது வீட்டிற்குள் இருந்து துர்நாற்றம் வீசியுள்ளது. இதனால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர், குமாரபாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார், வி.ஏ.ஓ., முருகன் முன்னிலையில் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அங்கு வெங்கடேசன் அழுகிய நிலையில் கிடந்தது தெரியவந்தது. சடலத்தை மீட்டு போலீசார் விசாரிதது வருகின்றனர்.
இவரது மனைவி சில ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார். மகன், மகள் ஆகியோருக்கு திருமணமாகி வாழ்ந்து வருகின்றனர். இவர் மட்டும் தனியாக வாழ்ந்து வந்தது குறிப்பிடத்தக்கது.