/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
குப்பை குவியலில் தீ அசம்பாவிதம் தவிர்ப்பு
/
குப்பை குவியலில் தீ அசம்பாவிதம் தவிர்ப்பு
ADDED : நவ 13, 2025 03:32 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குமாரபாளையம்: குமாரபாளையம், குளத்துக்காடு பகுதியில் தட்டான்குட்டை ஊராட்சிக்குட்பட்ட மயானம் உள்ளது. இங்கு குப்பையை மலைபோல் குவித்து வைக்கப்பட்டுள்ளது. அந்த வழியாக செல்வோர், புகைபிடித்துவிட்டு துாக்கி எறிந்த நெருப்பு பற்றி கொழுந்து விட்டு எரிந்தது.
அக்கம் பக்கத்தில் குடியிருப்புகள் உள்ள நிலையில் தீ விபத்து ஏற்பட்டதால், பொதுமக்கள் அச்சமடைந்தனர். உடனடியாக தீய-ணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படையினர், ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். உரிய நேரத்தில் தீய-ணைப்பு படையினர் வந்து தீயை அணைத்ததால், அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

