/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
வணிகர் நல வாரியத்தில் உறுப்பினர் சேர்க்க இன்று விழிப்புணர்வு கூட்டம்
/
வணிகர் நல வாரியத்தில் உறுப்பினர் சேர்க்க இன்று விழிப்புணர்வு கூட்டம்
வணிகர் நல வாரியத்தில் உறுப்பினர் சேர்க்க இன்று விழிப்புணர்வு கூட்டம்
வணிகர் நல வாரியத்தில் உறுப்பினர் சேர்க்க இன்று விழிப்புணர்வு கூட்டம்
ADDED : ஆக 12, 2025 02:15 AM
ராசிபுரம், தமிழக அரசு, வணிகர் நலன் காக்க, தமிழ்நாடு வணிகர் நல வாரியத்தை அமைத்துள்ளது. இதில், உறுப்பினராக சேர்வதற்கான ஆலோசனை மற்றும் விழிப்புணர்வு கூட்டம், ராசிபுரத்தில், எல்.ஐ.சி., அலுவலகம் அருகே உள்ள ரோட்டரி ஹாலில், இன்று காலை, 10:30 மணிக்கு நடக்கிறது. ரோட்டரி சங்க தலைவர் சுரேந்திரன் முன்னிலை வகிக்கிறார். ராசிபுரம் அனைத்து வணிகர் சங்க தலைவர் பாலாஜி தலைமை வகிக்கிறார்.
வணிக வரித்துறை உதவி ஆணையர் யாதவன் விளக்கமளிக்க உள்ளார். தமிழ்நாடு வணிகர் நல வாரியத்தில் இணைய, ஆதார், ரேஷன் கார்டு, பாஸ்போர்ட் அளவு போட்டோ, தொழில்வரி, ஜி.எஸ்.டி., நகல், செல்போன் ஆகியவை வேண்டும். இதில் இணைய, சொந்த இடம் அல்லது வாடகை கடையில் தொழில் செய்பவராக இருக்க வேண்டும். ஒருமுறை இணைந்தால் போதும், ஆயுள் வரை நீடிக்கும், புதுப்பித்தல் இருக்காது; வேறு எந்த அரசாங்க நல வாரியத்திலும் உறுப்பினராக இருக்க கூடாது. ஆண்டுக்கு, 40,000க்கும் கீழ் வணிகம் செய்பவர்களுக்கு சேர்க்கை கட்டணம் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், குடும்ப நிதி, கல்வி நிதி உள்ளிட்ட நலவாரியத்தில் கிடைக்கும் பயன்கள் குறித்து தெரிந்துகொள்ள விழிப்புணர்வு கூட்டத்தில் வணிகர்கள் கலந்துகொள்ளலாம் என வணிகர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.