ADDED : டிச 26, 2025 05:48 AM

நாமக்கல்:நாமக்கல்லில், இந்து சமய பேரவை திருப்பாவை குழு சார்பில், கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு நடத்தப்பட்டது.
இந்து சமய பேரவை திருப்பாவை குழு சார்பில், நாமக்கல் அரங்-கநாதர் சுவாமி கோவிலில், மார்கழி மாதம் முழுவதும் சிறப்பு வழிபாடு நடைபெறும். அதேபோல், இம்மாதத்தின் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை அதிகாலை, பக்தர்கள் தங்களது கையில் விளக்-கேந்தி மலைக்கோட்டையை வலம் வந்து சுவாமியை வழிபாடு செய்வர்.நடப்பாண்டு 55ம் ஆண்டாக நடக்கும் ஆன்மிக நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. தொடர்ந்து நான்காம் ஆண்டாக, அரங்கநாதர் கோவில் படிவசால் அருகே நடந்த வளைகாப்பு நிகழ்ச்சிக்கு, தலைவர் பாண்டியன் தலைமை வகித்தார். செயலாளர் சண்முகம், பொருளாளர் கோபி முன்-னிலை வகித்தனர். ஆடிட்டர் வெங்கடசுப்பரமணியம், சபரி சின்-னுசாமி, ஸ்ரீதேவி மோகன் ஆகியோர் நிகழ்ச்சியை துவக்கி வைத்-தனர். 35 கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு நடத்தப்பட்டது.

