/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
பென்சன் வழங்கக்கோரி மடிப்பிச்சை போராட்டம்
/
பென்சன் வழங்கக்கோரி மடிப்பிச்சை போராட்டம்
ADDED : மே 10, 2025 01:09 AM
நாமக்கல், சிறப்பு பென்சன் வழங்கக்கோரி, தமிழக சத்துணவு மற்றும் அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், நாமக்கல்லில் பட்டை நாமம் மற்றும் மடிப்பிச்சை ஏந்தி போராட்டம் நடத்தினர்.
நாமக்கல் கலெக்டர் அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்ட ஓய்வூதியர் சங்க மாவட்ட தலைவர் பழனியப்பன் தலைமை வகித்தார். அதில், தமிழக முதல்வர் தேர்தல் வாக்குறுதி, 313ன் படி, சிறப்பு பென்சன், 6,750 ரூபாய் அகவிலைப்படியுடன் கூடிய குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும்.
சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர்களுக்கு வரையறுக்கப்பட்ட ஓய்வூதியம், 7,850 ரூபாய் வழங்க வேண்டும். சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்புபடி, 2.57 காரணியால் பென்சன் மற்றும் ஊதியத்தை திருத்தி அமைக்க வேண்டும்.
மருத்துவபடி, மருத்துவ காப்பீடு, ஈமகிரியை செலவு நிதி, 25,000 ரூபாய் வழங்க வேண்டும். புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி, கூட்டமைப்பினர் நெற்றியில் பட்டை, நாமமிட்டு, பெண்கள் மடிப்பிச்சை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.