/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
பா.ஜ., தமிழக தலைவர் நயினார் நாகேந்திரன் நாளை மோகனுாரில் விவசாயிகளை சந்திக்கிறார்
/
பா.ஜ., தமிழக தலைவர் நயினார் நாகேந்திரன் நாளை மோகனுாரில் விவசாயிகளை சந்திக்கிறார்
பா.ஜ., தமிழக தலைவர் நயினார் நாகேந்திரன் நாளை மோகனுாரில் விவசாயிகளை சந்திக்கிறார்
பா.ஜ., தமிழக தலைவர் நயினார் நாகேந்திரன் நாளை மோகனுாரில் விவசாயிகளை சந்திக்கிறார்
ADDED : நவ 04, 2025 02:03 AM
நாமக்கல்,  நாமக்கல் நகரில், இன்று நடக்கும், பா.ஜ., பிரசார கூட்டத்தில், தமிழக தலைவர் நயினார் நாகேந்திரன் கலந்துகொள்கிறார். நாளை விவசாயிகளுடன் கலந்துரையாடி குறைகளை கேட்கிறார். நாமக்கல் கிழக்கு மாவட்ட, பா.ஜ., தலைவர் சரவணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
பா.ஜ., தமிழக தலைவர் நயினார் நாகேந்திரன், 'தமிழகம் தலைநிமிர தமிழனின் பயணம்' என்ற தலைப்பில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அதன்படி, இன்று மாலை, 5:00 மணிக்கு, நாமக்கல் பூங்கா சாலையில் கிழக்கு மாவட்ட தலைவர் சரவணன் தலைமையில் நடைபெறும் பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டு பேசுகிறார்.
மத்திய இணையமைச்சர் முருகன், மாநில துணைத்தலைவர்கள் ராமலிங்கம், துரைசாமி உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்கின்றனர். நாளை, பா.ஜ., சார்பில் மோகனுார் ஊராட்சி ஒன்றியம், ஊனாங்கல்பட்டியில், 'விவசாயிகளுடன் நயினார்' என்ற நிகழ்ச்சி நடக்கிறதுஉ மத்திய இணையமைச்சர் முருகன், கிழக்கு மாவட்ட தலைவர் சரவணன் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.
இதில், மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கலந்துகொண்டு, விவசாயிகளுடன் கலந்துரையாடி அவர்களின் குறைகளை கேட்கிறார். மாவட்ட, பா.ஜ., விவசாய அணி தலைவர் செந்தில்வாசன், துணைத்தலைவர் தர்மலிங்கம், பொதுச்செயலாளர் விஜயமூர்த்தி, மோகனுார் கிழக்கு ஒன்றிய தலைவர் அதிஷ், பொதுச்செயலாளர்கள் பழனிசாமி, சக்திவேல், விவசாய அணி ஒன்றிய தலைவர் தேவராஜ் ஆகியோர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்துள்ளனர்.

