/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
முதியோருக்கு வீடுதேடி சென்று ரேஷன் பொருட்கள் வினியோகம்
/
முதியோருக்கு வீடுதேடி சென்று ரேஷன் பொருட்கள் வினியோகம்
முதியோருக்கு வீடுதேடி சென்று ரேஷன் பொருட்கள் வினியோகம்
முதியோருக்கு வீடுதேடி சென்று ரேஷன் பொருட்கள் வினியோகம்
ADDED : நவ 04, 2025 02:03 AM
சேந்தமங்கலம், சேந்தமங்கலம் சுற்று வட்டாரத்தில் உள்ள ரேஷன் கடைகள் சார்பில், 70 வயதுக்கு மேற்பட்ட முதியோர், மாற்றுத்திறனாளிகளுக்கு, அவர்களின் நலன் கருதி வாடிக்கையாளர்களின் வீட்டிற்கே சென்று, ரேஷன் பொருட்களை வினியோகம் செய்யும் முதல்வரின் தாயுமானவர் திட்டத்தின் கீழ், நேற்று ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டது.
சேந்தமங்கலம் சுற்று வட்டாரத்தில் உள்ள, 70 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் மற்றும் மாற்று திறனாளிகளுக்கு நேரடியாக சென்று ரேஷன் பொருட்கள் வழங்கப்படும் என, ஏற்கனவே அறிவித்திருந்தனர். அதன்படி நவ., 3, 4 தேதிகளில் ரேஷன் பொருட்கள், டோர் டெலிவரி செய்ய ஏற்பாடு செய்திருந்தனர். நேற்று காலை, 8:00 மணி முதல் சேந்தமங்கலம் பேரூராட்சி பகுதியில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளில் இருந்தும் ரேஷன் பொருட்கள் முதியவர்களுக்கு வழங்கப்பட்டது.