ADDED : நவ 04, 2025 02:02 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
எலச்சிபாளையம்,  எலச்சிபாளையம் யூனியன், பெரியமணலி பஞ்., மணலிஜேடர்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அருகே, மழைநீர், சாக்கடை கழிவுநீருடன் கலந்து குளம்போல் தேங்கி நிற்கிறது.
இதனால், நோய்தொற்று பரவும் அபாய நிலை உருவாகியுள்ளது. மேலும், அங்குள்ள சுடுகாட்டில் பலமாதங்களாக மழைநீர் தேங்கியுள்ளதால், இறந்தவர்களை புதைக்க மற்றும் எரிக்க முடியாமல் மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதுகுறித்து பஞ்., நிர்வாகத்தில் பலமுறை கூறியும் நடவடிக்கை எடுக்கவில்லை. நேற்று, இ.கம்யூ., கட்சியின் ஒன்றிய செயலாளர் சிவக்குமார் தலைமையில், மணலிஜேடர்பாளையத்தில் பஞ்., நிர்வாகம் மற்றும் அரசு அதிகாரிகளை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

