/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
எருமப்பட்டி ஜல்லிக்கட்டில் துவம்சம் செய்த காளைகள்; தெறித்து ஓடிய வீரர்கள்
/
எருமப்பட்டி ஜல்லிக்கட்டில் துவம்சம் செய்த காளைகள்; தெறித்து ஓடிய வீரர்கள்
எருமப்பட்டி ஜல்லிக்கட்டில் துவம்சம் செய்த காளைகள்; தெறித்து ஓடிய வீரர்கள்
எருமப்பட்டி ஜல்லிக்கட்டில் துவம்சம் செய்த காளைகள்; தெறித்து ஓடிய வீரர்கள்
ADDED : ஜன 19, 2025 06:55 AM
எருமப்பட்டி: எருமப்பட்டி கைகாட்டியில் நடந்த ஜல்லிக்கட்டு போட்டியில், அடக்க வந்த மாடுபிடி வீரர்களை, காளைகள் துவம்சம் செய்தன. இதில், 23 வீரர்கள் காயமடைந்தனர். புதுக்கோட்டை மாட்டிற்கு, சிறந்த காளைக்கான பரிசு வழங்கப்பட்டது.
பொங்கல் விழாவையொட்டி, நாமக்கல் மாவட்டம், எருமப்-பட்டி கைகாட்டியில், தி.மு.க., இளைஞரணி சார்பில், நேற்று ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்பட்டது. எம்.பி., ராஜேஸ்குமார் தலைமை வகித்து, போட்டியை கொடியசைத்து துவக்கி வைத்தார். எஸ்.பி., ராஜேஸ்கண்ணன் முன்னிலை வகித்தார். மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
முதலாவதாக, வாடிவாசல் வழியாக கோவில் காளை திறந்து விடப்பட்டது. அதை தொடர்ந்து, மருத்துவ குழுவினர் பரிசோ-தனை செய்த காளைகள் ஒவ்வொன்றாக வாடிவாசலில் இருந்து அவிழ்த்து விடப்பட்டன. மாடுபிடி வீரர்கள், மருத்துவ பரிசோ-தனை செய்து சுழற்சி முறையில் மைதானத்திற்குள் அனுமதிக்கப்-பட்டனர். நாமக்கல், கரூர், அரியலுார், திருச்சி உள்ளிட்ட பல்-வேறு மாவட்டங்களில் இருந்து, 600க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. வாடிவாசலில் இருந்து துள்ளிக்குதித்து கம்பீரமாக வெளியே வந்த காளைகளை, அடக்க முடியாமல் மாடுபிடி வீரர்கள் தெறித்து ஓடினர். ஆனால், காளைகள் துரத்தி துரத்தி மாடுபிடி வீரர்களை துவம்சம் செய்தன. இதில், 23 பேர் காயமடைந்தனர். ஒரு காளைக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. கால்நடைத்து-றையினர், அந்த காளைக்கு சிகிச்சை அளித்தனர்.காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், மாட்டின் உரிமையாளர்க-ளுக்கும், எம்.பி., ராஜேஸ்குமார் சார்பில், 'டிவி', பிரிட்ஜ், தங்கம், வெள்ளிக்காசு, சைக்கிள் உள்ளிட்டவை பரிசாக வழங்கப்-பட்டன. ஒரு சில காளைகளின் உரிமையாளர்கள், தங்களது காளைகளை அடக்கும் மாடுபிடி வீரர்களுக்கு பரிசுத்தொகை வழங்கினர். மொத்தம், 497 காளைகள் களத்தில் பங்கேற்றன. இதில், புதுக்கோட்டை மாவட்டம், மங்கதேவன்பட்டி கருப்-பையா என்பவரின் காளைக்கு, சிறந்த காளைக்கான பரிசு வழங்-கப்பட்டது. விழாவில், எம்.எல்.ஏ., பொன்னுசாமி, அட்மா குழு தலைவர் பாலசுப்ரமணியன், டவுன் பஞ், தலைவர் பழனியாண்டி, துணைத்தலைவர் ரவில உள்பட பலர் கலந்துகொண்டனர்.