ADDED : அக் 17, 2026 06:58 AM
நாமக்கல்:ப.வேலுார்
தாலுகா, சுள்ளிபாளையம் கிராமத்தில், 2.50 ஏக்கர் அரசு புறம்போக்கு
நிலம், நீதிமன்ற உத்தரவுப்படி, தனியாருக்கு மாற்றம் செய்து
வழங்கப்பட்டது.
நீதிமன்ற உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு
செய்வதற்குள் அந்த நிலம், தனியாருக்கு மாற்றம் செய்தது தவறு என மாவட்ட
நிர்வாகம் சுட்டிக்காட்டியது.மேலும், சுள்ளிபாளையம் வி.ஏ.ஓ.,
சுரேஷ், திருச்செங்கோடு கோட்டத்தில் இருந்து, நாமக்கல் கோட்டம்,
மோகனுர் தாலுகா, செவ்விந்திப்பட்டி கிராமத்திற்கு இடமாற்றம்
செய்யப்பட்டார். இந்த உத்தரவை ரத்து செய்ய வலியுறுத்தி, நாமக்கல்,
திருச்செங்கோடு ஆர்.டி.ஓ., அலுவலக வளாகத்தில், கடந்த, 12, 13ல்,
வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பினர், காத்திருப்பு
போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடந்த, 14-ல், டி.ஆர்.ஓ., முன்னிலையில்
பேச்சு வார்த்தைக்கு அழைப்புவிடுத்ததை அடுத்து, போராட்டம்
தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது. இதற்கிடையில், வி.ஏ.ஓ.,
சுரேஷின் இடமாறுதல் உத்தரவை ரத்து செய்து, மீண்டும் திருச்செங்கோடு
கோட்டத்தில் பணி வழங்க டி.ஆர்.ஓ., மூலம் நேற்று முன்தினம்
உத்தரவிடப்பட்டது.
