/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
5 அறிவுசார் மையங்களில் பிப்., 2ல் தொழில்நெறி வழிகாட்டும் நிகழ்ச்சி
/
5 அறிவுசார் மையங்களில் பிப்., 2ல் தொழில்நெறி வழிகாட்டும் நிகழ்ச்சி
5 அறிவுசார் மையங்களில் பிப்., 2ல் தொழில்நெறி வழிகாட்டும் நிகழ்ச்சி
5 அறிவுசார் மையங்களில் பிப்., 2ல் தொழில்நெறி வழிகாட்டும் நிகழ்ச்சி
ADDED : ஜன 29, 2024 11:28 AM
நாமக்கல்: 'அறிவுசார் மையங்களில், வரும் பிப்., 2ல், தொழில்நெறி வழிகாட்டும் நிகழ்ச்சி நடக்கிறது' என, நாமக்கல் கலெக்டர் உமா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை:
போட்டி தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கு உதவும் வகையில், தமிழக அரசு சார்பில், நாமக்கல் மாவட்டத்தில், நாமக்கல், திருச்செங்கோடு, பட்டணம், பள்ளிப்பாளையம், மோகனுார் என, 5 அறிவுசார் மையங்கள் நிறுவப்பட்டுள்ளன. இம்மையங்களை, இலவசமாக பயன்படுத்திக்கொள்ளலாம். ஒவ்வொரு மாணவர்களுக்கும் படிப்பதற்கு தனி தடுப்பு அமைப்பு வசதி, மாநில மற்றும் மத்திய அரசு போட்டி தேர்வுகளுக்கான, பத்து லட்சம் ரூபாய் மதிப்புள்ள, 3,000 நுால்கள் கொண்ட நுாலக வசதி.
மின் புத்தகங்கள் மூலம் படிப்பதற்கான இணைய இணைப்புடன் கூடிய இலவச கணினி வசதி, படிப்பதற்கு ஏற்ப அமைதியான சூழல், மகளிருக்கான தனி கற்றல் பகுதி, குழந்தைகளுக்கான தனி வாசிக்கும் பகுதி, பயிற்சி கூடம் தினசரி செய்திதாள்கள் வாசிக்கும் பகுதி, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மற்றும் கழிவறை வசதி, குழு கலந்துரையாடல் பகுதி போன்ற அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
திங்கள் முதல் ஞாயிறு வரை, காலை, 10:00 முதல், மாலை, 6:00 மணி வரை, இம்மையங்கள் செயல்படுகிறது. வெள்ளிக்கிழமை வார விடுமுறை. மேலும், இங்கு, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் திறன் மேம்பாட்டு துறை மற்றும் மாவட்ட நுாலகத்துறை பங்களிப்புடன், துவக்கமாக தொழில் நெறி வழிகாட்டும் நிகழ்ச்சி நடக்கிறது.
வரும் பிப்., 2ல், மதியம், 2:30 மணிக்கு, நாமக்கல் அறிவுசார் மையத்தில், 'போட்டி தேர்வுகளில் வெற்றி பெறுவதற்கான தாராக மந்திரம்' என்ற தலைப்பிலும், தொடர்ந்து மற்ற அறிவுசார் மையங்களில், தமிழக அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படவுள்ள, 'போட்டி தேர்வுகள் குறித்த பகுப்பாய்வு', 'சுடராய் ஒளிர்வோம்' ஆகிய தலைப்புகளில், சிறப்பு பேச்சாளர்களை கொண்டு நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.
போட்டித் தேர்விற்கு தயாராகும் மாணவர்கள், இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, அறிவுசார் மையத்தை பயன்படுத்திக் கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.